×

மீண்டும் சர்ச்சையில் சிக்குவாரா மைனா?




மீண்டும் குஜாலா கதைகளில் நடிக்கமாட்டேன் என்று தீவிரமாக உள்ளாராம் அமலா பால்.
சாமியின் இயக்கத்தில் சிந்துசமவெளி படத்தில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிரங்கடித்தார் அமலா பால்.


ஆனால் அதற்கு பின்னர் விக்ரம், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மேல்தட்டு நாயகியாகி விட்ட அவர் கவர்ச்சி விஷயத்தில் அடக்கியே வாசித்து வருகிறார்.


இந்நேரத்தில் ஒரு புதுமுக இயக்குனர், சந்தர்ப்ப சூழ்நிலையில் செக்சுக்கு அடிமையாகும் ஒரு குடும்பப் பெண்ணைப்பற்றிய கதையை ரெடி பண்ணிக்கொண்டு அமலா பாலிடம் சொன்னாராம்.


ஆனால், சிந்து சமவெளியில் அப்படியொரு வேடத்தில் நடித்ததற்காக இப்போதுவரை வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கான பிராயசித்தமாகத்தான் கவர்ச்சிகரமான வேடங்களைகூட தவிர்த்து வருகிறேன்.


இந்நிலையில் மீண்டும் அப்படியொரு சேற்றை வாரி என் மீது இறைத்துக்கொள்ள நான் தயாராக இல்லை என்று அந்த இயக்குனரிடம் கூறி விரட்டியடித்து விட்டாராம்.


இருப்பினும், அந்த கதையில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும். அதோடு விருதுகூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அமலா பாலை விடாமல் துரத்திக்கொண்டு திரிகிறாராம் புதுமுக இயக்குனர்.