×

கருணாநிதியோட பேரன் எப்படி நடந்துப்பாரோ..? : பயந்து நடுங்கிய பூர்ணா!

டிச்ச நாலு படத்துல ரெண்டு ப்ளாப்பு, ரெண்டு பட்ஜெட் படமா இருந்தா க்ளவுட் நைன் பேனர்ல நடிக்கிறப்போ அது பெரிய பட்ஜெட் படமாத்தானே தெரியும். ஹீரோ அருள்நிதியா இருந்தாலும் என்னோட கேரியர்ல இதுதான் பெரிய பட்ஜெட் படம் என்று தைரியமாகச் சொன்னார் பூர்ணா. 

‘தகாராறு’ படத்தின் பிரமீட்டில் தொடர்ந்து அவர் பேசியதாவது : நான் நடிச்ச படங்கள்லேயே இதுதான் பெரிய பட்ஜெட் படம். இந்தப்படத்தோட சான்ஸே எனக்கு நடிகை பூஜாவால தான் கெடைச்சது. முதல்ல பூஜாதான் இந்தப்படத்துல கமிட்டாகியிருந்தாங்க. ஆனா அவங்களுக்கு டேட்ஸ் கொடுக்க பிரச்சனை வந்தப்போ டைரக்டர்கிட்ட என்னை ரெகமெண்ட் பண்ணினதே அவங்க தான். இந்த நேரத்துல அவங்களுக்கு நான் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். 

எல்லா ஹீரோயினும் வரும்போது இந்தப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்னு சொல்வாங்க. ஆனா இந்தப்படம் எனக்கு உண்மையிலேயே சம்திங் ஸ்பெஷல் தான். நீங்க ஏன் பெரிய ஹீரோக்களோட படங்கள்ல நடிக்கிறதில்ல, ஹிட் படங்கள் உங்களுக்கு அமையிறதில்லேன்னு நெறைய ரிப்போர்ட்டர்ஸ் என்கிட்ட கேட்பாங்க. அதுக்கு இந்தப்படம் பதிலா அமையும்னு நம்புறேன். 

முதல்நாள் இந்தப் படத்தோட ஷூட்டிங்குக்கு வந்தப்போ எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. அருள்நிதியோட பேமிலி ரொம்ப பெரிய இடம். அந்த இடத்துல இருந்து வர்ற அவரோட எப்படி ஒர்க் பண்ணப்போறோம்னு டென்ஷனாவும் இருந்தது. அந்த ஹுரோ எப்படி நடந்துப்பாரோன்னும் எனக்குள்ள பயம் இருந்தது.

பட் அருள்நிதி ரொம்ப இனிமையானவர். பார்க்கிறதுக்கு ஆள் ரொம்ப உயரமா, வெயிட்டா இருக்கார். ஆனா மனசு குழந்தை மாதிரி. இந்தப் படத்துல என்னைப் பார்க்கும் பொதெல்லாம் அவர் ஒரு சிரிப்பு சிரிப்பார். அது ரொம்ப க்யூட்டா இருக்கும் என்றார் பூர்ணா. அட, பயந்த புள்ளையும் பால் குடிக்குதே…?