×

அந்த பொண்ண என் கூட கம்பேர் பண்ணாதிங்க – குஷ்பு

ஹன்சிகாவை சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கிறார்கள் சினிமா உலகத்தினர். தற்போது குஷ்பு தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் அரண்மனை படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. ஒருமுறை “ஹன்சிகா குஷ்பு மாதிரி இருக்கிறாராமே?” என்று சுந்தர்.

சியிடம் கேட்டபோது, “எனக்கு அப்படித் தெரியவில்லை. சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வருவது, வேலையில் டெடிக்கேட்டிவா இருப்பது இதுல குஷ்பு மாதிரி இருக்காங்கன்னு சொல்லலாம்” என்று கூறியிருந்தார்.

இப்போது குஷ்பு அதே கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார். “ஏன் அப்படிச் சொல்றாங்க. நான் யாரையும் அப்படிச் சொன்னதில்லை. அவுங்கவுங்க திறமையை மட்டும் வைத்து பாராட்டுங்கள். ஏன் இன்னொருத்தரோட கம்பேர் பண்ணணும்.


நான் பார்த்தவரைக்கும் எனக்கு பிடித்த நடிகை சமந்தா. அழகா இருக்காங்க. நல்லா நடிக்கிறாங்க” என்று கூறியிருக்கிறார்.