‘நானே ராஜா நானே மந்திரி, ‘சிந்துபாத், ‘உனக்காகவே பிறந்தேன் போன்ற படங்களை இயக்கியும் பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தவருமான பாலு ஆனந்த் தற்போது சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஆந்திராவில் என்கவுண்டர் நடக்கும்போது தப்பியோடிய ஒரு நிரபராதி, தமிழ்நாட்டிற்கு வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். அப்போது அவருடைய வாழ்க்கையில் ஒரு இனிய காதல் குறுக்கிடுகிறது. காதல் கனிந்து திருமணம் ஆகும் நேரத்தில் ஆந்திர போலீஸ் அவரை நெருங்குகிறது. பின்னர் முடிவு என்ன என்பதை திகிலுடன் சொல்கிறார் பாலு ஆனந்த். இந்த படத்தில் சத்யா ஹீரோவாகவும், காவலன் படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்த மித்ரா குரியன் ஹீரோயினியாகவும் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்ற வாரம் ஊட்டியில் நடந்தது. முதல் இரண்டு நாட்கள் நடித்த நடிகை மித்ரா குரியன், மூன்றாவது நாள் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென மாயமாய் மறைந்துவிட்டார். அவர் தங்கியிருந்த அறையில் எதுவும் இல்லை. யாரிடமும் சொல்லாமல் அறையை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக பின்னர் தெரிந்தது. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் பின்னர் அதிரடியாக உடனே உதாஷா என்ற புதுமுகம் நடிகையை ஒப்பந்தம் செய்துவிட்டார். உதவி இயக்குனர் கொடுத்த செக்ஸ் டார்ச்சரால்தான் மித்ரா குரியன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டதாகவும், இதை பெரிதுபடுத்தினால் உதவி இயக்குனரின் எதிர்காலம் பாதிக்கும் என்பதாலும், பாலு ஆன்ந்த் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தவில்லை என்று கூறப்படுகிறது.