ராஜேஷ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேரப்போகிறாராம் தமன்னா.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களை இயக்கியவர் எம். ராஜேஷ்.
இதில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தைத் தவிர மற்ற மூன்று படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.
இந்நிலையில் ராஜேசுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகிறாராம் ஆர்யா.
மேலும் சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.