×

இன்னமும் நான் 50 கேஜி தாஜ்மஹாலாக இருக்கிறேன்:த்ரிஷா பெருமிதம்!

சினிமா களத்தில் இறங்கும் நடிகைகள் பெரும்பாலானவர்கள் வரும்போது ஒல்லிகுச்சியாக வந்தாலும், சில படங்களில் நடித்ததும் உடம்பில் சதை போட்டு புஷ்டியாகி விடுவார்கள்.

அதன்பிறகு பெருத்த உடம்பை குறைக்க ஜிம்மே கதியென்று கிடப்பார்கள். ஆனால் த்ரிஷா விசயத்தில் அப்படியில்லை. லேசா லேசா படத்தில் நடிக்க வந்தபோது எப்படியிருந்தாரோ அதே உடல்கட்டுடன் இப்போதும் இருக்கிறார்.


இதுபற்றி த்ரிஷாவைக்கேட்டால், எனது உடம்பு எனக்கு பெரிய கிப்ட். காரணம், நான் என்னதான் வெயிட் போடும் உணவுகளை எடுத்துக்கொண்டாலும் உடம்பில் ஒரு கிலோ எடைகூட அதிகரிக்காது. ஒல்லிகுச்சி ஹீரோக்கள்கூட என்னை எளிதாக தூக்கிவிடலாம்.

அந்த அளவுக்கு இன்னமும் நான் 50 கேஜி தாஜ்மஹாலாக இருக்கிறேன் என்கிறார்.அதுமட்டுமின்றி, வயது முப்பதை கடந்து விட்டாலும், இப்போதும் நான் இளமையாகவே இருக்கிறேன்.


 அதனால் என்னை புதிதாக பார்க்கும் வெளிநாட்டு நண்பர்கள் எனக்கு முப்பது வயது என்று சொன்னால் நம்பவே மறுக்கிறார்கள். ஆனால் என் வயதை காரணம் காட்டி சிலர் இளவட்ட நடிகர்களுடன் என்னை நடிக்க வைக்க தயங்குகிறார்கள்.


நடிப்பு என்று வருகிறபோது அந்த கதாபாத்திரத்துக்கு த்ரிஷா பொருத்தமாக இருப்பாரா? என்பதைதான் பார்க்க் வேண்டுமே தவிர எனது நிஜவயதை அதில் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்று சொல்லும் த்ரிஷா, தற்போது நடித்துள்ள என்றென்றும் புன்னகை, பூலோகம் படங்களில் தன்னை அதிக இளமையாக காண்பித்திருப்பதாகவும் சொல்கிறார்.